ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நால்வர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில், செங்கல்பட்டுக்கருகில் விழுப்புரத்திலிருந்து சென்னை பூந்தமல்லிக்கு க்ரைனைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லொரி வழியில் பழுதாகி நின்றுள்ளது.
இந்த நேரத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து முன்னாலிருந்த லொரியுடன் மோதியுள்ளது.
ஆம்னி பேருந்து மோதிய வேகத்திலேயே அதன் முன் பக்கம் நொறுங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
முசிறியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தொன்று ஏற்கனவே விபத்துக்குள்ளாகியிருந்த ஆம்னி பேருந்தின் பின்பக்கத்தில் வந்து மோதியது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த விபத்தின் காரணமாக திருச்சி - சென்னை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 3 மணித்தியாலத்துக்குப் பின்பே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான மூன்று வாகனங்கள்: நால்வர் பலி; 20 பேர் படுகாயம். ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நால்வர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில், செங்கல்பட்டுக்கருகில் விழுப்புரத்திலிருந்து சென்னை பூந்தமல்லிக்கு க்ரைனைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லொரி வழியில் பழுதாகி நின்றுள்ளது.இந்த நேரத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து முன்னாலிருந்த லொரியுடன் மோதியுள்ளது.ஆம்னி பேருந்து மோதிய வேகத்திலேயே அதன் முன் பக்கம் நொறுங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.முசிறியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தொன்று ஏற்கனவே விபத்துக்குள்ளாகியிருந்த ஆம்னி பேருந்தின் பின்பக்கத்தில் வந்து மோதியது.இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.குறித்த விபத்தின் காரணமாக திருச்சி - சென்னை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.சுமார் 3 மணித்தியாலத்துக்குப் பின்பே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.