• Dec 03 2024

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் ஆனந்த் குமார் சுந்தர்

Tharun / Jun 27th 2024, 7:41 pm
image

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.

இங்கிலாந்தின்  பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அங்கு ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. பிரதமராக ரிஷி சுனக் இருக்கிறார். இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது.

இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆனால், பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் கடந்த சில மாதம் முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், பிரிட்டனில் பிரிட்டனை பொறுத்தவரை மிக முக்கிய மற்றும் பெரிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் இருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் இருக்கிறார்.

பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் திக‌தி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேநேரம் எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு பாராளுமன்ற நடைமுறை  இங்கிலாந்தில் பின்பற்றப்படுவது வழக்கம். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம்.

பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர் ஆவார். பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்ல மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் ஆனந்த் குமார் சுந்தர் பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.இங்கிலாந்தின்  பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அங்கு ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. பிரதமராக ரிஷி சுனக் இருக்கிறார். இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது.இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆனால், பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் கடந்த சில மாதம் முன்பு அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், பிரிட்டனில் பிரிட்டனை பொறுத்தவரை மிக முக்கிய மற்றும் பெரிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் இருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் இருக்கிறார்.பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் திக‌தி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேநேரம் எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு பாராளுமன்ற நடைமுறை  இங்கிலாந்தில் பின்பற்றப்படுவது வழக்கம். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம்.பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர் ஆவார். பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்ல மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement