• Jun 26 2024

சட்டவிரோத துப்பாக்கி மூலம் விலங்கு வேட்டை...! புத்தளத்தில் ஒருவர் கைது...!

Sharmi / Jun 18th 2024, 4:57 pm
image

Advertisement

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி மூலம் விலங்குகளை வேட்டையாட்டி விற்பனை மோசடியில் ஈடுபட்ட ஒருவரை துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி  சட்டவிரோதமாக வைத்திருப்பதாக என வண்ணாத்திவில்லு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற் இரகசியத் தகவலுக்கமைய இன்று(18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவ 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்த துப்பாக்கியை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்த போது, ​​கையில் துப்பாக்கியுடன் வீட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.


சட்டவிரோத துப்பாக்கி மூலம் விலங்கு வேட்டை. புத்தளத்தில் ஒருவர் கைது. அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி மூலம் விலங்குகளை வேட்டையாட்டி விற்பனை மோசடியில் ஈடுபட்ட ஒருவரை துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி  சட்டவிரோதமாக வைத்திருப்பதாக என வண்ணாத்திவில்லு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று(18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவ 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் குறித்த துப்பாக்கியை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்த போது, ​​கையில் துப்பாக்கியுடன் வீட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement