• Jan 19 2025

விலங்குகள் மனிதர்களைப் போல் சிந்திக்க தொடங்கியுள்ளன

Tharmini / Jan 12th 2025, 10:43 am
image

மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியடைவதை போன்று விலங்குகளின் சிந்தனை திறனும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 

அந்த வகையில், முதலை ஒன்றின் செயல் இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இப்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில், தண்ணீருக்குள் முதலை ஒன்று மூழ்கியவாறு தன்னுடைய கைகளை மட்டும் மேலே உயர்த்தி சைகை செய்கிறது.

இந்த விடயம் தொடர்பில் பிரதேச வாசிகள், “மனிதர்களை அழைப்பதற்காக முதலை செய்யும் தந்திரமே இது, தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் யாரோ ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்கள் என நினைத்து அவர்களைப் காப்பாற்ற செல்ல வாய்ப்பு இருக்கிறது.

அப்போது, உண்மையில் அங்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள், மாறாக முதலை இருந்து அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடிவிடும்.” என விளக்கம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் விளக்கமளித்த முதலை நிபுணர்கள்,“ இப்படி ஒரு தந்திரத்தை முதலை செய்யும் என்பதை நாங்கள் நம்பவில்லை. அது இரையை வாயில் வைத்திருக்கும் நேரத்தில் கைகளை தண்ணீருக்கு மேலே உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.    

அத்துடன், முதலையின் நரம்பியல் செயல்பாடுகளாக கூட இருக்கலாம். பொதுவாக உப்புநீர் முதலைகள் இப்படி செய்யும். அவற்றின் தாடைகளின் உணவு இருக்கும்போது அவை இப்படி செய்ய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. குறித்த காணொளி இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தோனேஷியாவை விட ஆஸ்திரேலியாவில் தான் அதிக முதலைகள் இருக்கின்றன. மேலும், ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்டோர் உப்பு நீர் முதலையின் வேட்டையில் சிக்கி மரணிக்கின்றனர்.” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விலங்குகள் மனிதர்களைப் போல் சிந்திக்க தொடங்கியுள்ளன மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியடைவதை போன்று விலங்குகளின் சிந்தனை திறனும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதலை ஒன்றின் செயல் இணையவாசிகளை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இப்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில், தண்ணீருக்குள் முதலை ஒன்று மூழ்கியவாறு தன்னுடைய கைகளை மட்டும் மேலே உயர்த்தி சைகை செய்கிறது.இந்த விடயம் தொடர்பில் பிரதேச வாசிகள், “மனிதர்களை அழைப்பதற்காக முதலை செய்யும் தந்திரமே இது, தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் யாரோ ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்கள் என நினைத்து அவர்களைப் காப்பாற்ற செல்ல வாய்ப்பு இருக்கிறது.அப்போது, உண்மையில் அங்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள், மாறாக முதலை இருந்து அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடிவிடும்.” என விளக்கம் கொடுத்துள்ளனர்.இது தொடர்பில் விளக்கமளித்த முதலை நிபுணர்கள்,“ இப்படி ஒரு தந்திரத்தை முதலை செய்யும் என்பதை நாங்கள் நம்பவில்லை. அது இரையை வாயில் வைத்திருக்கும் நேரத்தில் கைகளை தண்ணீருக்கு மேலே உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.    அத்துடன், முதலையின் நரம்பியல் செயல்பாடுகளாக கூட இருக்கலாம். பொதுவாக உப்புநீர் முதலைகள் இப்படி செய்யும். அவற்றின் தாடைகளின் உணவு இருக்கும்போது அவை இப்படி செய்ய அதிகம் வாய்ப்பு இருக்கிறது. குறித்த காணொளி இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டுள்ளது.உண்மையில் இந்தோனேஷியாவை விட ஆஸ்திரேலியாவில் தான் அதிக முதலைகள் இருக்கின்றன. மேலும், ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்டோர் உப்பு நீர் முதலையின் வேட்டையில் சிக்கி மரணிக்கின்றனர்.” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement