• Nov 24 2024

அரசியல் நாடகத்துக்காக இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்ககூடாது- சுப்பிரமணியம் வலியுறுத்து

Sharmi / Aug 6th 2024, 7:47 pm
image

அரசியல் நாடகத்துக்காக இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(06) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் , இலங்கை மீனவர்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்பாக இருக்கிறது என்ற கருத்தை கூறியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஊடக வாயிலாக தெரிவித்துள்ளார்.

தனது அரசியலுக்காக, தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய இழுவைமடி மீனவர்களுக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தமை மன வருத்தத்திற்குரிய ஒரு விடயம். உண்மை விடயத்தை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாமலை தனது அரசியலுக்காக பேச்சுவார்த்தை ஒன்று நடத்த வேண்டும் என்று இந்திய மீனவர்களை ஏமாற்றுவதற்கான வேலையை நடத்துவதாக நாங்கள் கருதுகின்றோம்.

இறைமையுள்ள நாட்டுக்குள்ளே அந்நிய நாட்டவர்கள் அத்துமீறி உள்நுழைவது ஒரு மாபெரும் குற்றமாகும். Sea of Sri Lanka என்று அழைக்கப்படுகின்ற இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களால் ஏற்படுகின்ற விளைவின் காரணமாகவே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்யக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. அனர்த்தங்களும் ஏற்படுகிறது.

நாங்கள் கேட்டுக் கொள்வது யாதெனின் இந்திய இழுவை படகுகள் இரண்டு மாதங்கள் தமது தொழிலை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, அதனை தொடர்ச்சியாக பேசி நிரந்தர தீர்வினை ஏற்றுவதற்கு எப்போதும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பேச்சு வார்த்தைக்கு இலங்கை மீனவர்கள் எப்போதும் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்பதை அண்ணாமலைக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். 

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பினுள் வரவிடாமல் தடுப்பது அண்ணாமலை மற்றும் வெளிவிவகார அமைச்சருடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

உங்களது நாட்டுப் படகுகள் எங்களது நாட்டுக்குள் வராமல் தடுப்பதன் ஊடாக நிரந்தர தீர்வினை எட்டலாமே தவிர, நீங்கள் நினைப்பது போல் ஒரு அரசியல் நாடகப் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வளிக்காது என்பதை திட்டவட்டமாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.

அரசியல் நாடகத்துக்காக இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்ககூடாது- சுப்பிரமணியம் வலியுறுத்து அரசியல் நாடகத்துக்காக இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.இன்றையதினம்(06) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய மீனவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் , இலங்கை மீனவர்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்பாக இருக்கிறது என்ற கருத்தை கூறியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஊடக வாயிலாக தெரிவித்துள்ளார்.தனது அரசியலுக்காக, தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய இழுவைமடி மீனவர்களுக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தமை மன வருத்தத்திற்குரிய ஒரு விடயம். உண்மை விடயத்தை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.அண்ணாமலை தனது அரசியலுக்காக பேச்சுவார்த்தை ஒன்று நடத்த வேண்டும் என்று இந்திய மீனவர்களை ஏமாற்றுவதற்கான வேலையை நடத்துவதாக நாங்கள் கருதுகின்றோம்.இறைமையுள்ள நாட்டுக்குள்ளே அந்நிய நாட்டவர்கள் அத்துமீறி உள்நுழைவது ஒரு மாபெரும் குற்றமாகும். Sea of Sri Lanka என்று அழைக்கப்படுகின்ற இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களால் ஏற்படுகின்ற விளைவின் காரணமாகவே இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்யக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. அனர்த்தங்களும் ஏற்படுகிறது.நாங்கள் கேட்டுக் கொள்வது யாதெனின் இந்திய இழுவை படகுகள் இரண்டு மாதங்கள் தமது தொழிலை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, அதனை தொடர்ச்சியாக பேசி நிரந்தர தீர்வினை ஏற்றுவதற்கு எப்போதும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். பேச்சு வார்த்தைக்கு இலங்கை மீனவர்கள் எப்போதும் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்பதை அண்ணாமலைக்கு தெரிவிக்க விரும்புகின்றோம். இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பினுள் வரவிடாமல் தடுப்பது அண்ணாமலை மற்றும் வெளிவிவகார அமைச்சருடைய தலையாய கடமையாக இருக்கின்றது. உங்களது நாட்டுப் படகுகள் எங்களது நாட்டுக்குள் வராமல் தடுப்பதன் ஊடாக நிரந்தர தீர்வினை எட்டலாமே தவிர, நீங்கள் நினைப்பது போல் ஒரு அரசியல் நாடகப் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வளிக்காது என்பதை திட்டவட்டமாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement