• Jan 08 2025

திமுக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை விசித்திர போராட்டம்..!

Sharmi / Dec 27th 2024, 11:06 am
image

தி.மு.க அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை நேற்றையதினம்(26) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை, கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.

இதன்போது, அங்கு கூடிய அண்ணாமலையின் தொண்டர்கள் 'வெற்றிவேல், வீரவேல்' என்று கோசங்களை எழுப்பியதுடன் அண்ணாமலையை கட்டியணைத்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அண்ணாமலை,

இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் வருகின்ற நாள்களில் தீவிரப்படுத்துவோம் எனவும் கண்முன் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை கண்டுகொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை போரில்கூட பெண்களின் மீது கை வைக்கக் கூடாது என்பது மரபு. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

முருகப் பெருமானிடம் வேண்டி 6 சாட்டை அடிகளை சமர்பிக்கிறோம். இன்றையில் இருந்து விரதம் இருக்கப் போகிறோம். எனது காலணியை நேற்றையதினத்துடன்  கழற்றி வைத்துவிட்டேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து, பாஜகவின் இன்றைய போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய திகதி இன்று பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.





திமுக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை விசித்திர போராட்டம். தி.மு.க அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை நேற்றையதினம்(26) தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை, கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.இதன்போது, அங்கு கூடிய அண்ணாமலையின் தொண்டர்கள் 'வெற்றிவேல், வீரவேல்' என்று கோசங்களை எழுப்பியதுடன் அண்ணாமலையை கட்டியணைத்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அண்ணாமலை,இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் வருகின்ற நாள்களில் தீவிரப்படுத்துவோம் எனவும் கண்முன் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை கண்டுகொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.அதேவேளை போரில்கூட பெண்களின் மீது கை வைக்கக் கூடாது என்பது மரபு. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.முருகப் பெருமானிடம் வேண்டி 6 சாட்டை அடிகளை சமர்பிக்கிறோம். இன்றையில் இருந்து விரதம் இருக்கப் போகிறோம். எனது காலணியை நேற்றையதினத்துடன்  கழற்றி வைத்துவிட்டேன்.திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து, பாஜகவின் இன்றைய போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய திகதி இன்று பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement