• Nov 26 2024

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

Chithra / Dec 7th 2023, 11:08 am
image

 

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று வெளியிடப்பட்ட வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் (Verite) அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மேம்படுத்தலின் கீழ் ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் தலையீடு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்தநாட்டில் உள்ள 77 சதவீத முதியோர் ஏற்கவில்லை என அந்த நிறுவனம் அண்மையில் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

எனினும் அந்த நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரி அளவு 1008 தனி நபர்களாவர்.

எனவே அது முழு இலங்கை மக்களினதும் நிலைப்பாடாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் கடனைத் திருப்பிச்செலுத்தும் காலத்தை நீடித்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை முதன்மையாக எதிர்பார்க்கின்றது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நீடிக்கப்பட்ட கடனின் இரண்டாம் தவணை தாமதமின்றி நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.  ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று வெளியிடப்பட்ட வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் (Verite) அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.உள்நாட்டுக் கடன் மேம்படுத்தலின் கீழ் ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் தலையீடு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்தநாட்டில் உள்ள 77 சதவீத முதியோர் ஏற்கவில்லை என அந்த நிறுவனம் அண்மையில் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.எனினும் அந்த நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரி அளவு 1008 தனி நபர்களாவர்.எனவே அது முழு இலங்கை மக்களினதும் நிலைப்பாடாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் கடனைத் திருப்பிச்செலுத்தும் காலத்தை நீடித்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை முதன்மையாக எதிர்பார்க்கின்றது.இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நீடிக்கப்பட்ட கடனின் இரண்டாம் தவணை தாமதமின்றி நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement