• May 02 2025

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் அறிவிப்பு

Chithra / Sep 1st 2024, 2:59 pm
image


எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேரூந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.“பல வருடங்களாக விலைச்சூத்திரத்தின் கீழ் இயங்கி வருகிறது. விலைச்சூத்திரத்தின்படி 10 ரூபாய் மாற்றம் 4 சதவீதத்தை எட்டவில்லை. 

எனவே இம்முறை பேரூந்து கட்டணம் திருத்தப்படாது. என தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை 80 ரூபாவாக குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து தற்போது தொழில்நுட்ப குழுவொன்று செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் அறிவிப்பு எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேரூந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.இம்முறை விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.“பல வருடங்களாக விலைச்சூத்திரத்தின் கீழ் இயங்கி வருகிறது. விலைச்சூத்திரத்தின்படி 10 ரூபாய் மாற்றம் 4 சதவீதத்தை எட்டவில்லை. எனவே இம்முறை பேரூந்து கட்டணம் திருத்தப்படாது. என தெரிவித்தார்.இதேவேளை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை 80 ரூபாவாக குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து தற்போது தொழில்நுட்ப குழுவொன்று செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now