• Nov 17 2024

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று- ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல்...!

Sharmi / Jul 24th 2024, 8:58 am
image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று(24) இடம்பெறவுள்ள நிலையில் பூசாரி உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம்(23) கோவிலுக்கு பொலிஸ்,இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

இதுதொடர்பில் ஆலய பூசகர் நேற்று(23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் பொங்கல் வழிபாடுகளை செய்யும் வேளையில் பொலிஸ் தரப்பினரும் இராணுவம் மற்றும் தொல்பொருள்  திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களால் இன்று (23) காலை தொடக்கம் இப்போதுவரை விசாரனை நடாத்தப்பட்டது. 

அது தொடர்பாக கேட்டபோது நாங்கள் சிவன் சிலை பிரதிஷ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு வதந்தி கதையை பரப்பியுள்ளார்கள்.

இந்த வதந்தி பரப்பியவர்களை நாம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை, நாங்கள் அப்படியான நிலையில் ஆலயத்தை வழிநடத்தவில்லை , எங்களுடைய மூல மூர்த்தியாக இருக்கும் விநாயகப்பெருமானை நாங்கள் மென்மேலும் வழிபட்டு வருகின்றோம். அவருடைய அருள் இருக்குமென்பதை சகல மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் 

எந்தவொரு சிலை பிரதிஷ்டை செய்வது வேறு எந்த விதமான நிலைமையும் நடைபெறமாட்டாது. 

தயவுசெய்து இவ்வதந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என்றார்.

அத்தோடு இன்று பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார்

இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் இவ்வாறு வதந்தி பரப்பி ஆலய உற்சவத்தை குழப்ப சதி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று- ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று(24) இடம்பெறவுள்ள நிலையில் பூசாரி உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுநேற்றைய தினம்(23) கோவிலுக்கு பொலிஸ்,இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்இதுதொடர்பில் ஆலய பூசகர் நேற்று(23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் பொங்கல் வழிபாடுகளை செய்யும் வேளையில் பொலிஸ் தரப்பினரும் இராணுவம் மற்றும் தொல்பொருள்  திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களால் இன்று (23) காலை தொடக்கம் இப்போதுவரை விசாரனை நடாத்தப்பட்டது. அது தொடர்பாக கேட்டபோது நாங்கள் சிவன் சிலை பிரதிஷ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு வதந்தி கதையை பரப்பியுள்ளார்கள்.இந்த வதந்தி பரப்பியவர்களை நாம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை, நாங்கள் அப்படியான நிலையில் ஆலயத்தை வழிநடத்தவில்லை , எங்களுடைய மூல மூர்த்தியாக இருக்கும் விநாயகப்பெருமானை நாங்கள் மென்மேலும் வழிபட்டு வருகின்றோம். அவருடைய அருள் இருக்குமென்பதை சகல மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் எந்தவொரு சிலை பிரதிஷ்டை செய்வது வேறு எந்த விதமான நிலைமையும் நடைபெறமாட்டாது. தயவுசெய்து இவ்வதந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என்றார்.அத்தோடு இன்று பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார்இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் இவ்வாறு வதந்தி பரப்பி ஆலய உற்சவத்தை குழப்ப சதி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement