ஜனவரி முதல் பாணின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18% ஆக உயர்த்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களும் உயரவுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள வற்வரி அதிகரிப்புக் காரணமாக இலங்கையில் பாணின் விலைகூட அதிகரிக்கும்.
இதனால் நாட்டில் வறுமை தலைவிரித்தாடும் என்று யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் நிச்சயம் வெதுப்பக மூலப்பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும்.
இவ்வாறு மூலப்பொருள்கள் அதிகரித்தால் அதன் தாக்கம் பொதுமக்கள் மீதே விழும்.
கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இப் போழுதே வெதுப்பகப் பொருள்களின் விலைகள் உயரத் தொடங்கிவிட்டன.
வற்வரி அதிகரித்தால் யாழ்ப்பாணத்திலும் அதேநிலை ஏற்படும். ஆனால். இயலுமானவரையில் பாணின் விலையை அதிகரிக்காதிருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாணின் விலையில் மீண்டும் மாற்றம். வெளியான அறிவிப்பு.samugammedia ஜனவரி முதல் பாணின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18% ஆக உயர்த்தப்படவுள்ள நிலையில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களும் உயரவுள்ளது.இந்நிலையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள வற்வரி அதிகரிப்புக் காரணமாக இலங்கையில் பாணின் விலைகூட அதிகரிக்கும். இதனால் நாட்டில் வறுமை தலைவிரித்தாடும் என்று யாழ். மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்தார்.பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் நிச்சயம் வெதுப்பக மூலப்பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும். இவ்வாறு மூலப்பொருள்கள் அதிகரித்தால் அதன் தாக்கம் பொதுமக்கள் மீதே விழும். கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இப் போழுதே வெதுப்பகப் பொருள்களின் விலைகள் உயரத் தொடங்கிவிட்டன. வற்வரி அதிகரித்தால் யாழ்ப்பாணத்திலும் அதேநிலை ஏற்படும். ஆனால். இயலுமானவரையில் பாணின் விலையை அதிகரிக்காதிருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.