அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய ஒருவர் காயமடைந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்து, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கையில் மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவு. அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய ஒருவர் காயமடைந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்து, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.