• May 18 2024

மற்றுமொரு வரி அதிகரிப்பு..! ஜனாதிபதி ரணில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!

Chithra / Jan 1st 2024, 8:57 pm
image

Advertisement


நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலால் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் விஷேட மதுபானத்திற்குமான 6,000 ரூபா கலால் வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் வெளிநாட்டு மதுபானத்தின் மீதும் 6,600 ரூபாவாக இருந்த வரி 7,320 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன், சிகரெட்டின் விலையும் இன்று முதல் 3 பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

மற்றுமொரு வரி அதிகரிப்பு. ஜனாதிபதி ரணில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலால் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் விஷேட மதுபானத்திற்குமான 6,000 ரூபா கலால் வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் வெளிநாட்டு மதுபானத்தின் மீதும் 6,600 ரூபாவாக இருந்த வரி 7,320 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.அதேபோல், கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன், சிகரெட்டின் விலையும் இன்று முதல் 3 பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement