• May 06 2025

லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான மற்றுமொரு வாகனம் மீட்பு!

Chithra / Nov 1st 2024, 12:45 pm
image


முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின்  கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகட்டில் உள்ள இலக்கங்கள் அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபரின் வாகனத்தில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து  எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவுக்குச் சொந்தமான மற்றுமொரு வாகனம் மீட்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின்  கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகட்டில் உள்ள இலக்கங்கள் அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு நபரின் வாகனத்தில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இதேவேளை லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த 26 ஆம் திகதி மிரிஹான  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்த நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து  எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now