• Dec 03 2024

ஐ.நா சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி- பிரதமர் ஹரிணி சந்திப்பு..!

Sharmi / Nov 1st 2024, 12:45 pm
image

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi  நேற்றையதினம்(31) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி  அமரசூரியவை சந்தித்தார். 

இதன்போது, இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். 

ஆண், பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதி செய்தார். 

இதன்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி  அமரசூரியவினால் ஆண்,பெண் சமத்துவம், மகளிரின் பொருளாதார செயற்பாடுகள், ஆண்,பெண் சமூகத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை கையாள்கை மற்றும் இலங்கையில் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கான தீர்மானம்மிக்க பணிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார். 

அதேவேளை, கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன், தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான UNFPA அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, தேசிய வேலைத்திட்டத்தின் பகுப்பாய்வாளர் - ஆண் பெண் சமூகத்தன்மை/GBV  பிமலீ அமரசேகர, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



ஐ.நா சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி- பிரதமர் ஹரிணி சந்திப்பு. ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi  நேற்றையதினம்(31) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி  அமரசூரியவை சந்தித்தார். இதன்போது, இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதி செய்தார். இதன்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி  அமரசூரியவினால் ஆண்,பெண் சமத்துவம், மகளிரின் பொருளாதார செயற்பாடுகள், ஆண்,பெண் சமூகத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை கையாள்கை மற்றும் இலங்கையில் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கான தீர்மானம்மிக்க பணிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார். அதேவேளை, கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன், தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான UNFPA அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, தேசிய வேலைத்திட்டத்தின் பகுப்பாய்வாளர் - ஆண் பெண் சமூகத்தன்மை/GBV  பிமலீ அமரசேகர, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement