• Sep 21 2024

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் – இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 10:04 pm
image

Advertisement

பாராளுமன்றத்தில் நாளை(06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தலைமையில் இன்று(05) பாராளுமன்றத்தில் கூடியது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் ஒரு சில ஏற்பாடுகள், ஏனைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல், ஊழல், மற்றும் சொத்துக்கள் பொறுப்புக்களை பிரகடனப்படுத்தல் தொடர்பான தவறுகளை கண்டறிந்து விசாரனை செய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்கட்சியினால் குழு நிலையின் போது முன்வைக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தின் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை (06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் – இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை samugammedia பாராளுமன்றத்தில் நாளை(06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தலைமையில் இன்று(05) பாராளுமன்றத்தில் கூடியது.ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் ஒரு சில ஏற்பாடுகள், ஏனைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல், ஊழல், மற்றும் சொத்துக்கள் பொறுப்புக்களை பிரகடனப்படுத்தல் தொடர்பான தவறுகளை கண்டறிந்து விசாரனை செய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சட்டமூலத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.எதிர்கட்சியினால் குழு நிலையின் போது முன்வைக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தின் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை (06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement