ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்றியுள்ளாரென்றும் மேலும் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளாரென்றும் வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிலையம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மீதமுள்ள 10 வாக்குறுதிகளில் 09 வாக்குறுதிகள் தொடர்பில் நவம்பர் மாதத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்றும் ஜனாதிபதியால் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றவே முடியவில்லையென்றும் வெரிட்டே ரிசர்ச் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்றுகிறாரா என்பதைக் கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ‘அநுர மீட்டர்’ கொள்கை அறிக்கையின் புதுப்பிப்பை வெளியிடும் போது வெரிட்டே ரிசர்ச் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை அறிக்கையில் அளித்த 30 முக்கிய வாக்குறுதிகளை "அநுர மீட்டர்" கண்காணிக்கிறது.
இருப்பினும், டிட்வா சூறாவளி நாட்டைத் தாக்குவதற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டதாக வெரிட்டே ரிசர்ச் தெரிவித்துள்ளது. இங்கு கண்காணிக்கப்பட்ட 30 வாக்குறுதிகளில் 07 வாக்குறுதிகள் தொடர்பான நிலைப்பாடு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளைக் கருத்திற்கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்தலின் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய அநுர ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நவம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்றியுள்ளாரென்றும் மேலும் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளாரென்றும் வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிலையம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.மீதமுள்ள 10 வாக்குறுதிகளில் 09 வாக்குறுதிகள் தொடர்பில் நவம்பர் மாதத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்றும் ஜனாதிபதியால் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றவே முடியவில்லையென்றும் வெரிட்டே ரிசர்ச் தெரிவித்துள்ளது.தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்றுகிறாரா என்பதைக் கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ‘அநுர மீட்டர்’ கொள்கை அறிக்கையின் புதுப்பிப்பை வெளியிடும் போது வெரிட்டே ரிசர்ச் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை அறிக்கையில் அளித்த 30 முக்கிய வாக்குறுதிகளை "அநுர மீட்டர்" கண்காணிக்கிறது.இருப்பினும், டிட்வா சூறாவளி நாட்டைத் தாக்குவதற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டதாக வெரிட்டே ரிசர்ச் தெரிவித்துள்ளது. இங்கு கண்காணிக்கப்பட்ட 30 வாக்குறுதிகளில் 07 வாக்குறுதிகள் தொடர்பான நிலைப்பாடு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளைக் கருத்திற்கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.