வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தற்போது செய்திகளி வெளியாகி வருகின்றது.
இதன்படி மீள்குடியேற விரும்புவோருக்கான வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்க தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் எவ்வளவு சிங்களவர்கள் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்ற விபரங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் திரட்டப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஆளுங்கட்சியின் மேலிட உத்தரவொன்றின் பிரகாரம் இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.
வடக்கின் காணிகள் வெளியாரால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தான சர்ச்சைகள் நீண்டகாலம் நிலவிவரும் நிலையில், அங்கு சிங்கள மீள்குடியேற்றங்களுக்கு அரசாங்கம் தயாராகி வருவது தமிழர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த தயாராகும் அநுர அரசு- வெளியான தகவல் வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்த வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தற்போது செய்திகளி வெளியாகி வருகின்றது.இதன்படி மீள்குடியேற விரும்புவோருக்கான வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்க தயாராகி வருவதாக தெரியவருகின்றது.1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் எவ்வளவு சிங்களவர்கள் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்ற விபரங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் திரட்டப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.ஆளுங்கட்சியின் மேலிட உத்தரவொன்றின் பிரகாரம் இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.வடக்கின் காணிகள் வெளியாரால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தான சர்ச்சைகள் நீண்டகாலம் நிலவிவரும் நிலையில், அங்கு சிங்கள மீள்குடியேற்றங்களுக்கு அரசாங்கம் தயாராகி வருவது தமிழர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.