இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போதைக்கு அதிகூடுதலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மட்டுமன்றி சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள், விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வழியின்றி, தற்போதைக்கு சிறைச்சாலைகளில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே தற்போதைக்கு சிறைச்சாலைகளில் பாரியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறைக்கைதிகளுக்கு அடிக்கடி வழங்கப்படும் பொதுமன்னிப்புகளின் போது சட்டவிரோத மதுபானம் தயாரித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும் நபர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏனைய கைதிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் - கடுமையான இடநெருக்கடி இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போதைக்கு அதிகூடுதலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மட்டுமன்றி சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள், விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த வழியின்றி, தற்போதைக்கு சிறைச்சாலைகளில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இவ்வாறான சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே தற்போதைக்கு சிறைச்சாலைகளில் பாரியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே சிறைக்கைதிகளுக்கு அடிக்கடி வழங்கப்படும் பொதுமன்னிப்புகளின் போது சட்டவிரோத மதுபானம் தயாரித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும் நபர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏனைய கைதிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.