• Dec 19 2024

மதுபானசாலை அனுமதிக்குப் சிபாரிசு செய்தவர்களின் பெயர்களை அநுர அரசு உடனடியாக வெளியிட வேண்டும் - சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து!

Tamil nila / Dec 19th 2024, 7:35 pm
image

கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தற்போதைய அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

யாழ். வடமராட்சி, உடுப்பிட்டி - இமையாணன் மேற்குப் பகுதியில் அமையப் பெற்ற மதுபானசாலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறித்த மதுபானசாலை அகற்றப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து இந்த மனுவை 32 பொது அமைப்புக்கள் சேர்ந்து தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில், இந்த மதுபானசாலை ஏன் மூடப்படக்கூடாது என்பதற்கான காரணம் காட்டும் விசாரணை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன் போது, மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்,

கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியல்களை தற்போதைய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன் கற்காதவர்கள் நிதி கொடுத்துப் பெற்ற பட்டமே கலாநிதிப் பட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்தியப் பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உங்களது அரசமைப்பை முழுமையாக  நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறியமை வரவேற்கத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மதுபானசாலை அனுமதிக்குப் சிபாரிசு செய்தவர்களின் பெயர்களை அநுர அரசு உடனடியாக வெளியிட வேண்டும் - சுமந்திரன் மீண்டும் வலியுறுத்து கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தற்போதைய அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.யாழ். வடமராட்சி, உடுப்பிட்டி - இமையாணன் மேற்குப் பகுதியில் அமையப் பெற்ற மதுபானசாலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுக்கப்பட்டது.குறித்த மதுபானசாலை அகற்றப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து இந்த மனுவை 32 பொது அமைப்புக்கள் சேர்ந்து தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில், இந்த மதுபானசாலை ஏன் மூடப்படக்கூடாது என்பதற்கான காரணம் காட்டும் விசாரணை இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதன் போது, மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்,கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைச் சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியல்களை தற்போதைய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.அத்துடன் கற்காதவர்கள் நிதி கொடுத்துப் பெற்ற பட்டமே கலாநிதிப் பட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்தியப் பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உங்களது அரசமைப்பை முழுமையாக  நடைமுறைப்படுத்துங்கள் என்று கூறியமை வரவேற்கத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement