• Jan 19 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் அநுர அரசு - ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு

Chithra / Jan 5th 2025, 9:51 am
image

 

ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடக ஒடுக்குமுறை தொடர்பில் அரசாங்கத்துக்கு விசேட தேவையொன்று ஏற்பட்டுள்ளது. 

ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 

குறிப்பாக அரசாங்க பேச்சாளரால் பத்திரிகைகளின் பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றோம். 

நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால் நாம் அவற்றை அச்சுறுத்தவில்லை. என்றார்.

இந்நிலையில் கடந்த அரசுகள் போல் நாமும் ஊடகங்களை அச்சுறுத்தி அடக்கமாட்டோம். ஊடகங்கள் நடுநிலையுடன் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிட முழு உரிமையுண்டு. 

அதனை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என  அமைச்சரவையின் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஊடகங்களை அச்சுறுத்தும் அநுர அரசு - ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு  ஊடகங்கள் முன்வைக்கும் விமர்சனங்களிலுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஊடக ஒடுக்குமுறை தொடர்பில் அரசாங்கத்துக்கு விசேட தேவையொன்று ஏற்பட்டுள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசாங்க பேச்சாளரால் பத்திரிகைகளின் பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்திலும் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால் நாம் அவற்றை அச்சுறுத்தவில்லை. என்றார்.இந்நிலையில் கடந்த அரசுகள் போல் நாமும் ஊடகங்களை அச்சுறுத்தி அடக்கமாட்டோம். ஊடகங்கள் நடுநிலையுடன் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிட முழு உரிமையுண்டு. அதனை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என  அமைச்சரவையின் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement