2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய, சட்டத்தரணி சுனில் வதகல உள்ளிட்ட குழுவினர் தேர்தல்கள் அலுவலகத்திற்கு சென்று பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்
எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,
நாட்டு மக்கள் தற்போது நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்டுப்பணத்தை செலுத்தினார் அனுரகுமார 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.அதன்படி விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய, சட்டத்தரணி சுனில் வதகல உள்ளிட்ட குழுவினர் தேர்தல்கள் அலுவலகத்திற்கு சென்று பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டு மக்கள் தற்போது நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.