• Mar 13 2025

அனுராதபுரம் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்: நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு..!

Sharmi / Mar 12th 2025, 10:46 am
image

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது.

வவுனியா வைத்தியசாலை

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.








முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.







யாழ் போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.








இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்: நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது.வவுனியா வைத்தியசாலைஅனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைஅனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று(12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ் போதனா வைத்தியசாலையாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement