• Mar 12 2025

மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு வெளிநாடு செல்ல தடை!

Chithra / Mar 12th 2025, 11:21 am
image

 

தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியரின் விசாரணைக்கு உதவ விரும்பும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

1929 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நேற்று விதிக்கப்பட்டது. 

குறித்த ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனிப்பட்ட விடயம் தொடர்பில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாரசபை முன் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்


மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியருக்கு வெளிநாடு செல்ல தடை  தனது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பு ஆசிரியரின் விசாரணைக்கு உதவ விரும்பும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1929 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் நேற்று விதிக்கப்பட்டது. குறித்த ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனிப்பட்ட விடயம் தொடர்பில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாரசபை முன் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement