• Sep 20 2024

ஆப்பிளின் விலை ரூ.2000! இலங்கையில் தலைசுற்ற வைக்கும் பழங்களின் விலை..!

Chithra / Dec 21st 2022, 11:05 am
image

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ பச்சை ஆப்பிள் 2400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால்  சில பல்பொருள் அங்காடிகள் ஒரு கிலோ பச்சை ஆப்பிள்களின் விலையை 1990 ரூபாவாக குறைத்துள்ளன.


இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ ஆரஞ்சு 990 ரூபாய், மற்றும் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 700 ரூபாய். மேலும், 100 கிராம் திராட்சை 250 முதல் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை உயர்வால் பழ வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஆப்பிளின் விலை ரூ.2000 இலங்கையில் தலைசுற்ற வைக்கும் பழங்களின் விலை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ பச்சை ஆப்பிள் 2400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால்  சில பல்பொருள் அங்காடிகள் ஒரு கிலோ பச்சை ஆப்பிள்களின் விலையை 1990 ரூபாவாக குறைத்துள்ளன.இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ ஆரஞ்சு 990 ரூபாய், மற்றும் ஒரு கிலோ மாம்பழத்தின் விலை சுமார் 700 ரூபாய். மேலும், 100 கிராம் திராட்சை 250 முதல் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை உயர்வால் பழ வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement