• Dec 09 2024

கடவளை பாடசாலைக்கு அதிபரை நியமியுங்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!

Sharmi / Sep 27th 2024, 11:01 am
image

ஹட்டன் வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1யைச் சேர்ந்த பாடசாலையான கடவளை விக்னேஸ்வரா கல்லூரிக்கு தரம் பெற்ற அதிபரை இதுவரை  மத்திய மாகாணத்தால் நியமிக்கப்படவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் இதற்கு முன் கடமையிலிருந்த அதிபர் திடீர் சுகயினம் காரணமாக உயிரிழந்தார்.

அவர் உயிரிழப்பதற்கு முன் கடமையை பொறுப்பளித்து சென்ற தரப்பினரே பாடசாலையை நடாத்தி செல்கின்றனர்.

குறித்த பாடசாலையில் உயர் தரம் வரை வகுப்புக்கள் காணப்படுவதால் தரம் பெற்ற அதிபரை நியமித்திருக்க வேண்டிய பொறுப்பு மாகாண கல்வி செயலாளரின் பொறுப்பாகும்.

இருப்பினும் தற்போதுள்ள நிர்வாகம் பாடசாலையை நடாத்தி சென்றாலும் அவர்கள் ஆசிரியர் தரம் கொண்டவர்கள். அவர்களால்  அதிகாரத்தை பயன்படுத்தும் போது முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 மேலும் அதிகார துஸ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்.

ஆதலால் குறித்த பாடசாலைக்கு மிக விரைவாக தேர்தல் ஆணையகத்தின் அனுமதியை பெற்றாவது மத்திய மாகாணத்தால் குறுகிய காலத்தில் தரம் பெற்ற அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.


கடவளை பாடசாலைக்கு அதிபரை நியமியுங்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. ஹட்டன் வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1யைச் சேர்ந்த பாடசாலையான கடவளை விக்னேஸ்வரா கல்லூரிக்கு தரம் பெற்ற அதிபரை இதுவரை  மத்திய மாகாணத்தால் நியமிக்கப்படவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பாடசாலையில் இதற்கு முன் கடமையிலிருந்த அதிபர் திடீர் சுகயினம் காரணமாக உயிரிழந்தார்.அவர் உயிரிழப்பதற்கு முன் கடமையை பொறுப்பளித்து சென்ற தரப்பினரே பாடசாலையை நடாத்தி செல்கின்றனர்.குறித்த பாடசாலையில் உயர் தரம் வரை வகுப்புக்கள் காணப்படுவதால் தரம் பெற்ற அதிபரை நியமித்திருக்க வேண்டிய பொறுப்பு மாகாண கல்வி செயலாளரின் பொறுப்பாகும்.இருப்பினும் தற்போதுள்ள நிர்வாகம் பாடசாலையை நடாத்தி சென்றாலும் அவர்கள் ஆசிரியர் தரம் கொண்டவர்கள். அவர்களால்  அதிகாரத்தை பயன்படுத்தும் போது முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அதிகார துஸ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்.ஆதலால் குறித்த பாடசாலைக்கு மிக விரைவாக தேர்தல் ஆணையகத்தின் அனுமதியை பெற்றாவது மத்திய மாகாணத்தால் குறுகிய காலத்தில் தரம் பெற்ற அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement