• May 14 2025

கொழும்பு பேராயர்- பாப்பரசர் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ் சந்திப்பு..!

Sharmi / May 14th 2025, 10:01 am
image

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், புதிதாக நியமிக்கப்பட்ட போப் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்டை சந்தித்துள்ளார்.

கொழும்பு மறை மாவட்டம், கார்டினல் மால்கம் ரஞ்சித் மற்றும் போப் ராபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.

மறைந்த போப் பிரான்சிஸுக்குப் பிறகு இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக வாடிகன் நகரில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் நடந்த போப்பாண்டவர் மாநாட்டில், கார்டினல்களின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.


கொழும்பு பேராயர்- பாப்பரசர் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ் சந்திப்பு. கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், புதிதாக நியமிக்கப்பட்ட போப் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்டை சந்தித்துள்ளார்.கொழும்பு மறை மாவட்டம், கார்டினல் மால்கம் ரஞ்சித் மற்றும் போப் ராபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.மறைந்த போப் பிரான்சிஸுக்குப் பிறகு இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர்.புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக வாடிகன் நகரில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் நடந்த போப்பாண்டவர் மாநாட்டில், கார்டினல்களின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

Advertisement

Advertisement

Advertisement