• Oct 01 2026

மாணவர் எண்ணிக்கையைக் காட்டி அரசு பாடசாலைகளுக்குப் பூட்டு போடப்படுகிறதா? வெளியாகியுள்ள தகவல்

Chithra / Sep 30th 2026, 7:47 am
image


அரச பாடசாலைகள் எதுவும் தன்னிச்சையாக மூடப்படமாட்டாது என்றும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமே நடப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்


கடந்த சில ஆண்டுகளாக மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள பாடசாலைகள் குறித்து மட்டுமே கோட்ட/வலய மட்டத்தில் அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. வெறுமனே பாடசாலைகளைத் திறந்து வைப்பதை விட, அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதே அரசின் இலக்கு. கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க விரைவில் 3,000 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.


வளப் பகிர்வு, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மதிப்பீட்டு முறைகளைmodernize செய்வதோடு, 2027-இல் 1, 2 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.பாடசாலை நேரத்தை மாற்றுவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவோ அல்லது கலந்துரையாடலோ மேற்கொள்ளப்படவில்லை.

மாணவர் எண்ணிக்கையைக் காட்டி அரசு பாடசாலைகளுக்குப் பூட்டு போடப்படுகிறதா வெளியாகியுள்ள தகவல் அரச பாடசாலைகள் எதுவும் தன்னிச்சையாக மூடப்படமாட்டாது என்றும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமே நடப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்கடந்த சில ஆண்டுகளாக மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள பாடசாலைகள் குறித்து மட்டுமே கோட்ட/வலய மட்டத்தில் அறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. வெறுமனே பாடசாலைகளைத் திறந்து வைப்பதை விட, அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதே அரசின் இலக்கு. கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க விரைவில் 3,000 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.வளப் பகிர்வு, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மதிப்பீட்டு முறைகளைmodernize செய்வதோடு, 2027-இல் 1, 2 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.பாடசாலை நேரத்தை மாற்றுவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவோ அல்லது கலந்துரையாடலோ மேற்கொள்ளப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement