• Sep 28 2024

அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கின்ற அரச அடிவருடிகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? மாணவர்கள் கேள்வி!

Sharmi / Feb 11th 2023, 2:17 pm
image

Advertisement

அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கின்ற சில அரச அடிவருடிகள் தமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைத்து சிங்க கொடிகளை ஏந்தியவாறு பேரணிகளை முன்னெடுப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உபதலைவர் இரா.தர்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 75வது சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உபதலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊர்திகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் வடக்கிலுள்ள அமைச்சர் ஒருவர் தாங்களும் ஊர்திகளை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் உரிமைகளை கேட்டு போராடும் போதே இந்த போட்டிக்கு போட்டி போட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி, மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்த கொள்கையிலுள்ள ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் தொடர்ந்து இந்த மக்களையும் இந்த மண்ணையும் இங்கு திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கே தொடர்ச்சியாக பாடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கின்ற அரச அடிவருடிகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா மாணவர்கள் கேள்வி அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கின்ற சில அரச அடிவருடிகள் தமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைத்து சிங்க கொடிகளை ஏந்தியவாறு பேரணிகளை முன்னெடுப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உபதலைவர் இரா.தர்சன் குற்றம் சுமத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் 75வது சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உபதலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊர்திகளை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் வடக்கிலுள்ள அமைச்சர் ஒருவர் தாங்களும் ஊர்திகளை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் மக்கள் உரிமைகளை கேட்டு போராடும் போதே இந்த போட்டிக்கு போட்டி போட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி, மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.புத்த கொள்கையிலுள்ள ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் தொடர்ந்து இந்த மக்களையும் இந்த மண்ணையும் இங்கு திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கே தொடர்ச்சியாக பாடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement