• Jan 29 2025

யாழில் இடம்பெறும் விபத்துகளுக்கு பொலிஸாரும் காரணமா?

Thansita / Jan 27th 2025, 9:40 pm
image

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள்இ அங்கவீனங்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.அந்தவகையில்

இந்த விபத்துக்களுக்கு காரணங்களாக கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காணப்படுகின்றன. அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துப் பொலிசார், வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களான வீதி ஓரத்தில் உள்ள மஞ்சள் கோடு, வீதியின் திருப்பங்கள் போன்ற இடங்களில் நின்று வாகனங்களை மறிக்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளில் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிசார் இருள்சூழ்ந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு டோர்ச் லைட்டின் ஒளியினை வீதியில் செல்லும் சாரதிகளின் கண்களை நோக்கி பாய்ச்சி அவர்களை மறிக்கின்றனர். இதுவும் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு - சித்தங்கேணி வீதியில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதியில் ஆபத்தான இரண்டு திடீர் திருப்பங்கள் காணப்படுகின்றன. அந்த வீதி ஓரத்தில் மஞ்சள் கோடும் காணப்படுகின்றன. அந்த திருப்பத்தில் பொலிஸார் நிற்பது இரண்டு பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களின் சாரதிகளுக்கும் தெரியாது. அந்தப் பகுதியில் சாதாரணமாகவே விபத்துகளும் ஏற்படுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது.

குறித்த பகுதியில் நிற்கும் பொலிஸார் ஆபத்தான முறையில் வாகனங்களை மறிப்பது வழமை. வீதியால் வரும் வாகனங்களின் கண்களில் தாங்கள் தென்படாது இருப்பதற்காகவே அந்த பகுதியில் நின்று வாகனங்களுக்கும், சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை மறிக்கின்றனர்.

இவ்வாறான பகுதியில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது, அப்படி மறிப்பது வீதி விதிமுறைகளுக்கு எதிரானது, ஆபத்து நிறைந்தது என பலரும் அந்த பகுதியில் நிற்கும் பொலிஸாருக்கு எடுத்துக்கூறினாலும் பொலிஸார் மக்களை மிரட்டுவது போல செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக பொலிஸாரை கடமையில் அமர்த்தும்போது, பொலிஸாரே விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றனர் என்ற விடயமானது மக்கள் மத்தியில் அச்சத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மற்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


யாழில் இடம்பெறும் விபத்துகளுக்கு பொலிஸாரும் காரணமா அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் மரணங்கள்இ அங்கவீனங்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.அந்தவகையில் இந்த விபத்துக்களுக்கு காரணங்களாக கட்டாக்காலி கால்நடைகள், மது போதையில் சாரத்தியம், அவதானமின்மை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் உறக்கம் என்பன காணப்படுகின்றன. அத்துடன் பொலிஸாரின் செயற்பாடுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போக்குவரத்துப் பொலிசார், வாகனங்களை நிறுத்தக் கூடாத இடங்களான வீதி ஓரத்தில் உள்ள மஞ்சள் கோடு, வீதியின் திருப்பங்கள் போன்ற இடங்களில் நின்று வாகனங்களை மறிக்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளில் கடமையிலிருக்கும் போக்குவரத்துப் பொலிசார் இருள்சூழ்ந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு டோர்ச் லைட்டின் ஒளியினை வீதியில் செல்லும் சாரதிகளின் கண்களை நோக்கி பாய்ச்சி அவர்களை மறிக்கின்றனர். இதுவும் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு - சித்தங்கேணி வீதியில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதியில் ஆபத்தான இரண்டு திடீர் திருப்பங்கள் காணப்படுகின்றன. அந்த வீதி ஓரத்தில் மஞ்சள் கோடும் காணப்படுகின்றன. அந்த திருப்பத்தில் பொலிஸார் நிற்பது இரண்டு பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களின் சாரதிகளுக்கும் தெரியாது. அந்தப் பகுதியில் சாதாரணமாகவே விபத்துகளும் ஏற்படுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது.குறித்த பகுதியில் நிற்கும் பொலிஸார் ஆபத்தான முறையில் வாகனங்களை மறிப்பது வழமை. வீதியால் வரும் வாகனங்களின் கண்களில் தாங்கள் தென்படாது இருப்பதற்காகவே அந்த பகுதியில் நின்று வாகனங்களுக்கும், சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் வாகனங்களை மறிக்கின்றனர்.இவ்வாறான பகுதியில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது, அப்படி மறிப்பது வீதி விதிமுறைகளுக்கு எதிரானது, ஆபத்து நிறைந்தது என பலரும் அந்த பகுதியில் நிற்கும் பொலிஸாருக்கு எடுத்துக்கூறினாலும் பொலிஸார் மக்களை மிரட்டுவது போல செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக பொலிஸாரை கடமையில் அமர்த்தும்போது, பொலிஸாரே விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றனர் என்ற விடயமானது மக்கள் மத்தியில் அச்சத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மற்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement