• May 18 2024

108 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: ஜனாதிபதி வழங்கிய பணிப்புரை

Chithra / Dec 12th 2023, 4:20 pm
image

Advertisement

 

 

108 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ்  படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹென்றி பெட்ரிஸ் இலங்கையின் காலனித்துவ அதிகாரிகளால் அரசாங்கத்திற்கு எதிரான கலவரம் மற்றும் தேசத்துரோகத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூலை 7, 1915 அன்று, அப்போது 27 வயதாக இருந்த எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு எந்த முறையீட்டையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிடப்பட்டார்.

இதன்பின் ஹென்றி பெட்ரிஸின் உடல், இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை தகனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி, அடையாளம் தெரியாத இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

அப்போது நாட்டைக் கட்டுப்படுத்திய மூத்த அதிகாரிகள் மேற்கொண்ட திட்டத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொலை சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்களைக் கண்டறியும் வகையில் அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

108 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: ஜனாதிபதி வழங்கிய பணிப்புரை   108 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ்  படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.ஹென்றி பெட்ரிஸ் இலங்கையின் காலனித்துவ அதிகாரிகளால் அரசாங்கத்திற்கு எதிரான கலவரம் மற்றும் தேசத்துரோகத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.ஜூலை 7, 1915 அன்று, அப்போது 27 வயதாக இருந்த எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு எந்த முறையீட்டையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிடப்பட்டார்.இதன்பின் ஹென்றி பெட்ரிஸின் உடல், இராணுவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை தகனம் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி, அடையாளம் தெரியாத இடத்தில் தகனம் செய்யப்பட்டது.அப்போது நாட்டைக் கட்டுப்படுத்திய மூத்த அதிகாரிகள் மேற்கொண்ட திட்டத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, கொலை சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்களைக் கண்டறியும் வகையில் அமைச்சரவையில் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement