• Mar 31 2025

கூரிய ஆயுதத்தால் தாக்கி இராணுவ சிப்பாய் படுகொலை..!! samugammedia

Tamil nila / Feb 2nd 2024, 8:45 pm
image

மினுவாங்கொடை - நில்பனாகொட பிரதேசத்தில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) காலை இடம்பெற்றுள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இராணுவ வீரராக பணியாற்றியவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் புகுந்த திருடன் அவரது மனைவிக்கு சொந்தமான தங்க நகையை திருடிச் சென்றுள்ளதுடன், அது தொடர்பில் குறித்த நபரிடம் விசாரணை நடத்த சென்ற போது சந்தேக நபர் இராணுவ சிப்பாயை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி இராணுவ சிப்பாய் படுகொலை. samugammedia மினுவாங்கொடை - நில்பனாகொட பிரதேசத்தில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (01) காலை இடம்பெற்றுள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் இராணுவ வீரராக பணியாற்றியவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் புகுந்த திருடன் அவரது மனைவிக்கு சொந்தமான தங்க நகையை திருடிச் சென்றுள்ளதுடன், அது தொடர்பில் குறித்த நபரிடம் விசாரணை நடத்த சென்ற போது சந்தேக நபர் இராணுவ சிப்பாயை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement