உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றையதினம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராவணா கொட விஜயபாகு முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறையில் தனது இல்லத்திற்கு வந்து விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் என்ற 29 வயதேயான இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம்(21) சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் உடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் திம்புள பத்தனை பொலிசார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
விடுமுறையில் வீட்டிற்கு வந்த இராணுவச் சிப்பாய்; பரிதாபமாக உயிரிழந்த துயரம். உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.இராவணா கொட விஜயபாகு முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விடுமுறையில் தனது இல்லத்திற்கு வந்து விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் என்ற 29 வயதேயான இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவரது உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்றையதினம்(21) சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் உடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் திம்புள பத்தனை பொலிசார் மேலதிக விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.