நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம்(11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் பாரதூரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
வருகிறார்கள் சுடுகின்றனர், தப்பியோடுகின்றனர்.
எனவே இது குறித்து நம் நாட்டு சாமானியர்களிடம் பெரும் அச்சம் நிலவுகிறது. பெரும் சந்தேகம் உள்ளது. சமூகத்தின் பாதுகாப்பு, சமூகத்தில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசின் பொறுப்பாகும். இதற்கான தீர்வு என்ன? சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் வன்முறையை ஒழிப்பதற்கு எங்களுடைய ஆதரவை நிச்சயம் வழங்குவோம்.
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க பொதுப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படவேண்டும்.
இதுதொடர்பில் அரசின் பதில் என்ன? இப்படி ஒரு நாடு முன்னேற முடியுமா? இப்படியான சம்பவங்கள் சுற்றுலாத்துறையைப் பாதிக்கிறது.
எனவே, சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த வன்முறைக்கு எதிராக 225 பேரும் ஒரே இடத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன்.
அரசும் தன் கடமையைச் செய்யவேண்டும். நாங்கள் யாரும் பாதாள உலக போதைக்கு அடிமையானவர்களுக்காக நிற்கவில்லை.
எனவே அதைச் சரிசெய்யவேண்டும்.
அதேவேளை - நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரவிராஜைக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும்.
ஜோசப் பரராஜசிங்கத்தைக் கொன்றவர்களைக் கைது செய்யவேண்டும். மகேஸ்வரனைக் கொன்றவர்களைப் பிடிக்க வேண்டும்.
கீத் நொயார், உபாலி தென்னக்கோன்,இவர்களைக் கொன்றவர்களைப் பிடிக்க வேண்டும்.
அவர்களின் துன்பத்துக்காக நாங்கள் பேசினோம். நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, லசந்த விக்கிரமதுங்கவின் சிறந்த நண்பர்.
லசந்த விக்கிரமதுங்கவுக்கு எங்கே நீதி? நான் பேசுவது அது மட்டும் அல்ல. வெளிப்படையாக, இந்த பாதாள உலகத்தை, இந்தக் கொலையை, இந்தசெயல்முறையை ஒடுக்குவதற்கு அரசு ஒரு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே என்றார்.
முன்னாள் எம்.பிகளை படுகொலை செய்தவர்களை கைது செய்யுங்கள்.சஜித் பிரேமதாஸ கோரிக்கை. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.நேற்றையதினம்(11) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இன்று சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் பாரதூரமான சூழல் ஏற்பட்டுள்ளது. வருகிறார்கள் சுடுகின்றனர், தப்பியோடுகின்றனர். எனவே இது குறித்து நம் நாட்டு சாமானியர்களிடம் பெரும் அச்சம் நிலவுகிறது. பெரும் சந்தேகம் உள்ளது. சமூகத்தின் பாதுகாப்பு, சமூகத்தில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசின் பொறுப்பாகும். இதற்கான தீர்வு என்ன சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் வன்முறையை ஒழிப்பதற்கு எங்களுடைய ஆதரவை நிச்சயம் வழங்குவோம்.பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க பொதுப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படவேண்டும். இதுதொடர்பில் அரசின் பதில் என்ன இப்படி ஒரு நாடு முன்னேற முடியுமா இப்படியான சம்பவங்கள் சுற்றுலாத்துறையைப் பாதிக்கிறது. எனவே, சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த வன்முறைக்கு எதிராக 225 பேரும் ஒரே இடத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன். அரசும் தன் கடமையைச் செய்யவேண்டும். நாங்கள் யாரும் பாதாள உலக போதைக்கு அடிமையானவர்களுக்காக நிற்கவில்லை. எனவே அதைச் சரிசெய்யவேண்டும். அதேவேளை - நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரவிராஜைக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும். ஜோசப் பரராஜசிங்கத்தைக் கொன்றவர்களைக் கைது செய்யவேண்டும். மகேஸ்வரனைக் கொன்றவர்களைப் பிடிக்க வேண்டும்.கீத் நொயார், உபாலி தென்னக்கோன்,இவர்களைக் கொன்றவர்களைப் பிடிக்க வேண்டும். அவர்களின் துன்பத்துக்காக நாங்கள் பேசினோம். நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, லசந்த விக்கிரமதுங்கவின் சிறந்த நண்பர். லசந்த விக்கிரமதுங்கவுக்கு எங்கே நீதி நான் பேசுவது அது மட்டும் அல்ல. வெளிப்படையாக, இந்த பாதாள உலகத்தை, இந்தக் கொலையை, இந்தசெயல்முறையை ஒடுக்குவதற்கு அரசு ஒரு முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே என்றார்.