உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸை முடிந்தால் கைது செய்யுமாறு கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது மீண்டும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேச ஆரம்பித்திருக்கின்றார்.
ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவற்றை நம்புவதற்கு தயாராக இல்லை.
முடிந்தால் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் டிரான் அலஸை கைது செய்யுமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
அந்த வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆனால் தாம் ஆட்சியமைத்தால் அர்ஜூன் மகேந்திரனின் காதுகளைப் பிடித்து இழுத்து வருவோம் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் எதுவுமே பேசுவதில்லை.
இன்று பாரியளவில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. என்றார்.
முடிந்தால் டிரான் அலஸை கைது செய்யுங்கள் அரசுக்கு சவால் விடுத்த ஹிருணிகா உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸை முடிந்தால் கைது செய்யுமாறு கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சவால் விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,தற்போது மீண்டும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேச ஆரம்பித்திருக்கின்றார்.ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவற்றை நம்புவதற்கு தயாராக இல்லை. முடிந்தால் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் டிரான் அலஸை கைது செய்யுமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றேன்.நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக குரலெழுப்புபவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.அந்த வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டிருக்கின்றார்.ஆனால் தாம் ஆட்சியமைத்தால் அர்ஜூன் மகேந்திரனின் காதுகளைப் பிடித்து இழுத்து வருவோம் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் எதுவுமே பேசுவதில்லை.இன்று பாரியளவில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. என்றார்.