தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சி நிலவும் ஒரு நாட்டில், செயல்பாட்டு சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது, சட்டத்தின் ஆட்சி ஒழிக்கப்பட்டால், அந்த நாட்டு மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இழப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் சுதந்திரத்தில் இது ஒரு அடிப்படைக் காரணி, கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை, ஒருவர் விரும்பியபடி வேலை செய்யும் உரிமை, ஒருவரின் மதத்தைப் பின்பற்றும் உரிமை போன்றவை ஜனநாயக சமூகத்தில் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுவதாகவும்,
அரசாங்கத்தின் அரசியல் மேடையிலிருந்த இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகளை பொலிஸ் பிரிவு பொறுப்பான செயலாளராகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் நியமித்து இலங்கை பொலிஸ் பிரிவு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகவும்,
இலங்கை பொலிஸ் பிரிவை கண்ணியம் இல்லாத இடமாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும், நாட்டில் தற்போது நிலவும் மோசமான சூழ்நிலை மாறாவிட்டால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது - சாகர சீற்றம் தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சட்டத்தின் ஆட்சி நிலவும் ஒரு நாட்டில், செயல்பாட்டு சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது, சட்டத்தின் ஆட்சி ஒழிக்கப்பட்டால், அந்த நாட்டு மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இழப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் சுதந்திரத்தில் இது ஒரு அடிப்படைக் காரணி, கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை, ஒருவர் விரும்பியபடி வேலை செய்யும் உரிமை, ஒருவரின் மதத்தைப் பின்பற்றும் உரிமை போன்றவை ஜனநாயக சமூகத்தில் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுவதாகவும், அரசாங்கத்தின் அரசியல் மேடையிலிருந்த இரண்டு ஓய்வுபெற்ற அதிகாரிகளை பொலிஸ் பிரிவு பொறுப்பான செயலாளராகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் நியமித்து இலங்கை பொலிஸ் பிரிவு அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை பொலிஸ் பிரிவை கண்ணியம் இல்லாத இடமாக மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும், நாட்டில் தற்போது நிலவும் மோசமான சூழ்நிலை மாறாவிட்டால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.