• Nov 25 2024

அறுகம்பை தாக்குதல் திட்டம் - மேலும் சில தரப்பினர் தொடர்பில் வெளியான தகவல்!

Chithra / Oct 29th 2024, 9:40 am
image


வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள பிரதேசம் ஒன்றை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளனர். 

அத்துடன், அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில தரப்பினர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலங்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் அறிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும், 

அதன் பின்னர் மேலும் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

அறுகம்பை தாக்குதல் திட்டம் - மேலும் சில தரப்பினர் தொடர்பில் வெளியான தகவல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள பிரதேசம் ஒன்றை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளனர். அத்துடன், அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில தரப்பினர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலங்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் மேலும் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement