பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அந்தக் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன இருக்கும் வரை தாம் தமது கட்சியிலிருந்து உறுப்பினர்களை நியமிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கோப் குழுவின் தலைவராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் கோப் குழுவின் 30 உறுப்பினர்களில் 11 பேர் இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கோப் குழுவில் ரோஹித இருக்கும்வரை எமது கட்சியிலிருந்து யாரையும் நியமிக்கப் போவதில்லை எதிர்க்கட்சி அதிரடி பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.அந்தக் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன இருக்கும் வரை தாம் தமது கட்சியிலிருந்து உறுப்பினர்களை நியமிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கோப் குழுவின் தலைவராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் கோப் குழுவின் 30 உறுப்பினர்களில் 11 பேர் இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.