• Nov 24 2024

147 வருட வரலாற்றில் ஆசிய வீரராக அஸ்வின் உலக சாதனை!

Tamil nila / Sep 20th 2024, 7:10 pm
image

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ப‌ங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பல சாதனைகளைச் செய்துள்ளார்.

7வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 199 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

113 ஓட்டங்களைல் ஆட்டமிழந்த அஸ்வின், முன்னாள் கப்டன் டோனியின் சத சாதனையைச் சமப்படுத்தியுள்ளார்.

2004 முதல் – 2014 வரை விளையாடிய டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார்.

அஸ்வின் 2011 முதல் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்து டோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கிய போட்டிகளில் அஸ்வின் 4 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது அல்லது அதற்குக் கீழ் வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

1. டேனியல் வெட்டோரி(நியூசிலாந்து): 5

2. ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா): 4*

3. கம்ரான் அக்மல்/ஜேசன் ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்): தலா

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மைதானத்தில் 2 சதம் மற்றும் இரண்டு 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

ஆச்சரியப்படும் வகையில் கபில் தேவ் அஸ்வின் ஆகிய இருவருமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 சதங்கள் மற்றும் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000+ ஓட்டங்கள் மற்றும் 100+ விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் (1637 ஓட்டங்கள், 102 விக்கெட்டுகள்) உலக சாதனையை அஸ்வின் (1050 ரன்கள், 174 விக்கெட்டுகள்) சமன் செய்துள்ளார்.

இவை அனைத்தையும் விட 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் 20 முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் பந்து வீச்சில் 30க்கும் மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.


147 வருட வரலாற்றில் ஆசிய வீரராக அஸ்வின் உலக சாதனை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ப‌ங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பல சாதனைகளைச் செய்துள்ளார்.7வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 199 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.113 ஓட்டங்களைல் ஆட்டமிழந்த அஸ்வின், முன்னாள் கப்டன் டோனியின் சத சாதனையைச் சமப்படுத்தியுள்ளார்.2004 முதல் – 2014 வரை விளையாடிய டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார்.அஸ்வின் 2011 முதல் இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்து டோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கிய போட்டிகளில் அஸ்வின் 4 சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது அல்லது அதற்குக் கீழ் வரிசையில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.1. டேனியல் வெட்டோரி(நியூசிலாந்து): 52. ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா): 4*3. கம்ரான் அக்மல்/ஜேசன் ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்): தலாடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மைதானத்தில் 2 சதம் மற்றும் இரண்டு 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.ஆச்சரியப்படும் வகையில் கபில் தேவ் அஸ்வின் ஆகிய இருவருமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 சதங்கள் மற்றும் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனை படைத்துள்ளனர்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000+ ஓட்டங்கள் மற்றும் 100+ விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் (1637 ஓட்டங்கள், 102 விக்கெட்டுகள்) உலக சாதனையை அஸ்வின் (1050 ரன்கள், 174 விக்கெட்டுகள்) சமன் செய்துள்ளார்.இவை அனைத்தையும் விட 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் 20 முறை 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களையும் பந்து வீச்சில் 30க்கும் மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement