இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்றது.
டிசம்பர் 18ஆம் தேதியன்று டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.
இதை அடுத்து, ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்தார்.
38 வயது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார்.
அவர் 619 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2010ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அஸ்வின் முதன்முறையாகக் களமிறங்கினார்.
சர்வதேச கிரிக்கட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்றது.டிசம்பர் 18ஆம் தேதியன்று டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.இதை அடுத்து, ஆட்டம் சமநிலையில் முடிந்தது.இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்தார்.38 வயது அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.முதல் இடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார்.அவர் 619 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.2010ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அஸ்வின் முதன்முறையாகக் களமிறங்கினார்.