• Mar 06 2026

விளையாட்டு சுற்றுலா, ரக்பி மேம்பாட்டிற்கு ஆசிய ரக்பி சம்மேளனம் முழு ஆதரவு!

shanu / Feb 9th 2026, 12:02 pm
image

டுபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது மற்றும் விளையாட்டு சுற்றுலாவை (Sports Tourism) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல்-தலை மற்றும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் டுபாயில் உள்ள அல் பைத் மாளிகையில் (Al Bayt Palace) நடைபெற்றுள்ளது.


வெளிநாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் சர்வதேச ரக்பி போட்டிகளை ஏற்பாடு செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திறன் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.


இலங்கை ரக்பி விளையாட்டின் தொழில்நுட்பத் தரத்தை உயர்த்துவதற்கும், வீரர்களுக்குத் தேவையான சர்வதேச அளவிலான பயிற்சிகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் ஆசிய ரக்பி சம்மேளனம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என அதன் தலைவர் கைஸ் அல்-தலை உறுதியளித்தார்.


இவ்வாறான சர்வதேச உறவுகளின் ஊடாக இலங்கையை ஒரு பிராந்திய விளையாட்டு மையமாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் சுனில் குமார கமகே இங்கு வலியுறுத்தினார்.


மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், இலங்கையின் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிகழ்வில் டுபாயை தளமாகக் கொண்ட முன்னணி விளையாட்டு அமைப்பான Sri Lions International நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கெலும் சுஜித் பெரேரா உட்பட அதன் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


விளையாட்டு சுற்றுலா, ரக்பி மேம்பாட்டிற்கு ஆசிய ரக்பி சம்மேளனம் முழு ஆதரவு டுபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது மற்றும் விளையாட்டு சுற்றுலாவை (Sports Tourism) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல்-தலை மற்றும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் டுபாயில் உள்ள அல் பைத் மாளிகையில் (Al Bayt Palace) நடைபெற்றுள்ளது.வெளிநாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இலங்கையில் சர்வதேச ரக்பி போட்டிகளை ஏற்பாடு செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திறன் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.இலங்கை ரக்பி விளையாட்டின் தொழில்நுட்பத் தரத்தை உயர்த்துவதற்கும், வீரர்களுக்குத் தேவையான சர்வதேச அளவிலான பயிற்சிகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கும் ஆசிய ரக்பி சம்மேளனம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என அதன் தலைவர் கைஸ் அல்-தலை உறுதியளித்தார்.இவ்வாறான சர்வதேச உறவுகளின் ஊடாக இலங்கையை ஒரு பிராந்திய விளையாட்டு மையமாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் சுனில் குமார கமகே இங்கு வலியுறுத்தினார்.மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், இலங்கையின் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு மிகவும் சாதகமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிகழ்வில் டுபாயை தளமாகக் கொண்ட முன்னணி விளையாட்டு அமைப்பான Sri Lions International நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கெலும் சுஜித் பெரேரா உட்பட அதன் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement