• Apr 30 2025

திரைப்பட பாணியில் படுகொலை முயற்சிகள்! அடாவடியில் ஈடுபடும் கும்பல் சிக்கியது

Chithra / Apr 29th 2025, 3:33 pm
image

 

திரைப்பட பாணியில் நபரொருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த முன்னாள் இராணுவ வீரர் உட்பட நால்வர் கொண்ட கும்பல் ஒன்று களுத்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய கத்திகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், பாணந்துறை, பயாகலை, பண்டாரகம, ஊரகஹ பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 30, 32, 36 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நால்வரும் தமிழ்த்திரைப்பட பாணியில் களுத்துறை பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் அடிதடி, படுகொலை முயற்சிகள், வாள்வெட்டுத்தாக்குதல் போன்ற அடாவடிகளில் ஈடுபடும் அடியாட்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

மேலும், குற்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாள், இரண்டு கத்திகள் மற்றும் மூன்று தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் கடந்த ஆண்டு பாணந்துறையில் உள்ள ஒரு பெரிய ஆடைத் தொழிற்சாலையில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த முக்கிய சந்தேக நபர்களென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

திரைப்பட பாணியில் படுகொலை முயற்சிகள் அடாவடியில் ஈடுபடும் கும்பல் சிக்கியது  திரைப்பட பாணியில் நபரொருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த முன்னாள் இராணுவ வீரர் உட்பட நால்வர் கொண்ட கும்பல் ஒன்று களுத்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 17ஆம் திகதி களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய கத்திகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், பாணந்துறை, பயாகலை, பண்டாரகம, ஊரகஹ பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 30, 32, 36 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நால்வரும் தமிழ்த்திரைப்பட பாணியில் களுத்துறை பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் அடிதடி, படுகொலை முயற்சிகள், வாள்வெட்டுத்தாக்குதல் போன்ற அடாவடிகளில் ஈடுபடும் அடியாட்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.அத்துடன் பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.மேலும், குற்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாள், இரண்டு கத்திகள் மற்றும் மூன்று தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்டவர்களில் கடந்த ஆண்டு பாணந்துறையில் உள்ள ஒரு பெரிய ஆடைத் தொழிற்சாலையில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த முக்கிய சந்தேக நபர்களென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement