• May 06 2025

பல்கலை மாணவன் மீது தாக்குதல்; மற்றுமொரு மாணவன் கைது - 7 மாணவர்களுக்கு வலைவீச்சு

Chithra / May 6th 2025, 1:37 pm
image

 

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பல்கலைக்கழக மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர  பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 7 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை பலமாக தாக்கியுள்ளனர். 

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலை மாணவன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

பல்கலை மாணவன் மீது தாக்குதல்; மற்றுமொரு மாணவன் கைது - 7 மாணவர்களுக்கு வலைவீச்சு  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பல்கலைக்கழக மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீ ஜயவர்த்தனபுர  பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 7 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவனை பலமாக தாக்கியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலை மாணவன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement