• Oct 08 2024

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள்; ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

Chithra / Oct 7th 2024, 12:46 pm
image

Advertisement

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் 14.11.2024 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த அறிக்கை இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் தினம் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.

அத்துடன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களினதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்கள், பெயர் குறித்த நியமனப் பத்திரங்களுடன் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட வேண்டும். 

மேலும், பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள்; ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் 14.11.2024 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த அறிக்கை இன்று  வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த நியமனங்களைக் கையளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் தினம் பிரகடனம் செய்யப்பட்ட தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்களை உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் பெயர் குறித்த நியமனப்பத்திரங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.அத்துடன், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களினதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய வெளிப்படுத்தல்கள், பெயர் குறித்த நியமனப் பத்திரங்களுடன் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட வேண்டும். மேலும், பெயர் குறித்த நியமனப்பத்திரத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement