“சிறுவர்கள் தான் எதிர்கால மனித வளம் என்பதால் ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும்” என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மனைப்பொருளியல் அலகின் இணைப்பாளரும் விரிவுரையாருமான மேனகா சிவாகரன் தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் “இலங்கையில் மோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் குழந்தை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்”எனும் இளந்தளிர் திட்டத்தின் போஷாக்குணவு தயாரிப்பு நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் முன்னுரிமை பெறுகிறது. சிறுவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களது போஷணையை மேம்பாடடையச் செய்வதன் மூலம் எதிர்காலச் சந்ததி போஷாக்கானதாக மாறும் நாட்டின் கல்வித்தரம் பொருளாதாரம் சுகாதாரம் உயரும்.
பிரதேசத்தில் மலிவாகவும் வளமாகவும் கிடைக்கக் கூடியதாகவுள்ள மூலப் பொருட்களைக் கொண்டு எவ்வாறு எமது போஷணை மட்டத்தை விருத்தி செய்து கொள்ளலாம் அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வழிவகை காண்பிக்கப்படுகிறது.
ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுவர்களுடைய போஷணைகளை மேம்படுத்தும் விதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் ஏறாவூர்பப்ற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 240 சிறுவர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
சமகாலத்தில இலங்கையில் நிலவும் சாதாரண குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக வறிய குடும்பங்கள் மத்தியில் போஷணையான உணவு நுகர்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும் - யாழ்.பல்கலை இணைப்பாளர் “சிறுவர்கள் தான் எதிர்கால மனித வளம் என்பதால் ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும்” என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மனைப்பொருளியல் அலகின் இணைப்பாளரும் விரிவுரையாருமான மேனகா சிவாகரன் தெரிவித்தார்.விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் “இலங்கையில் மோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் குழந்தை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்”எனும் இளந்தளிர் திட்டத்தின் போஷாக்குணவு தயாரிப்பு நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் முன்னுரிமை பெறுகிறது. சிறுவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதால் அவர்களது போஷணையை மேம்பாடடையச் செய்வதன் மூலம் எதிர்காலச் சந்ததி போஷாக்கானதாக மாறும் நாட்டின் கல்வித்தரம் பொருளாதாரம் சுகாதாரம் உயரும்.பிரதேசத்தில் மலிவாகவும் வளமாகவும் கிடைக்கக் கூடியதாகவுள்ள மூலப் பொருட்களைக் கொண்டு எவ்வாறு எமது போஷணை மட்டத்தை விருத்தி செய்து கொள்ளலாம் அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் வழிவகை காண்பிக்கப்படுகிறது.ஓரங்கட்டப்பட்டுள்ள சிறுவர்களுடைய போஷணைகளை மேம்படுத்தும் விதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் ஏறாவூர்பப்ற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 240 சிறுவர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.சமகாலத்தில இலங்கையில் நிலவும் சாதாரண குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக வறிய குடும்பங்கள் மத்தியில் போஷணையான உணவு நுகர்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.