இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினத்துக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக மின்சார பாவனையாளர்களுக்கோ மின்சாரசபை ஊழியர்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து, அடுத்துவரும் ஓர் இரண்டு வருடங்களில் இது தனியார் மயமாகும் வகையில் 25, 30 பங்குகளாக பிரிக்கப்படும்.
மின்சக்தி அமைச்சர், மின்சார சபை தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு முகம்கொடுப்பதில்லை, கலந்துரையாட இடமளிப்பதில்லை, கடிதங்களுக்கு பதிலளிக்காமல், வேறு சிலருக்கு இந்த நடவடிக்கையை கையளித்துவிட்டு மறைந்து செயற்படுகிறார்.
அதனால் மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுறை அறிவித்துவிட்டு இன்று கொழும்புக்கு வர தீர்மானித்திருக்கிறது. என்றார்.
தொழிற்சங்க போராட்டம் தீவிரமாகும் - இன்று கொழும்பில் ஒன்றுகூடவுள்ள மின்சார சபை ஊழியர்கள் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. இன்றைய தினத்துக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக மின்சார சபையின் சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக மின்சார பாவனையாளர்களுக்கோ மின்சாரசபை ஊழியர்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து, அடுத்துவரும் ஓர் இரண்டு வருடங்களில் இது தனியார் மயமாகும் வகையில் 25, 30 பங்குகளாக பிரிக்கப்படும். மின்சக்தி அமைச்சர், மின்சார சபை தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு முகம்கொடுப்பதில்லை, கலந்துரையாட இடமளிப்பதில்லை, கடிதங்களுக்கு பதிலளிக்காமல், வேறு சிலருக்கு இந்த நடவடிக்கையை கையளித்துவிட்டு மறைந்து செயற்படுகிறார்.அதனால் மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுறை அறிவித்துவிட்டு இன்று கொழும்புக்கு வர தீர்மானித்திருக்கிறது. என்றார்.