• Apr 02 2025

சொத்துக்கள் முடக்கப்படும்..! - பொலிஸார் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jun 9th 2024, 8:06 am
image

 

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசாரணை நடவடிக்கையின் போது வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

இத்தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்கள் முடக்கப்படும். - பொலிஸார் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை  இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த நபர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விசாரணை நடவடிக்கையின் போது வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.இத்தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement