• Nov 28 2024

இம் முறையாவது ஜனாதிபதி எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் - கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள்..!samugammedia

mathuri / Jan 4th 2024, 9:37 pm
image

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம் முறையாவது எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

" சென்ற ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் தங்களை சந்தித்த போது  தங்களிடம் விடுத்த வேண்டுதல்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாங்கள் உடன் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஆனால் அவற்றில் எவையும் நிறைவேற்றப்படவில்லை. 

இம்முறையாவது அவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வாருங்கள். தாங்கள் பதவியேற்றவுடன் விரைவில் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எவ்வித முயற்சியும் நடைபெறுவதாகதெரியவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம்"  என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இம் முறையாவது ஜனாதிபதி எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் - கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள்.samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம் முறையாவது எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது," சென்ற ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் தங்களை சந்தித்த போது  தங்களிடம் விடுத்த வேண்டுதல்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாங்கள் உடன் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஒரு வருடம் பூர்த்தியாகிறது. ஆனால் அவற்றில் எவையும் நிறைவேற்றப்படவில்லை.  இம்முறையாவது அவற்றை கருத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வாருங்கள். தாங்கள் பதவியேற்றவுடன் விரைவில் தமிழினத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எவ்வித முயற்சியும் நடைபெறுவதாகதெரியவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம்"  என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement