• Jan 21 2025

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

Tharmini / Jan 21st 2025, 1:16 pm
image

சிட்னியில் ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் இன்று (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அண்மைய நடவடிக்கை இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரின் கிழக்கில் அமைந்துள்ள யூத பாடசாலை மற்றும் ஜெப ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் இதனால் விரிவான சேதத்தை சந்தித்தது.

எனினும், அந் நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் (14.00 GMT, திங்கள்கிழமை) நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சிட்னி நகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிட்னியில் கடந்த நான்கு நாட்களில் யூத சொத்துக்கள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

மேலும், அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் யூத சமூகத்தை குறிவைத்து இதே போன்ற குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் வந்துள்ளது.

இந்த தாக்குதல் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் சிட்னி பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

2023 ஒக்டோபர் 7, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் மற்றும் காசாவில் அடுத்தடுத்து நடந்த போருக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல் சிட்னியில் ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் இன்று (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது.அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அண்மைய நடவடிக்கை இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.நகரின் கிழக்கில் அமைந்துள்ள யூத பாடசாலை மற்றும் ஜெப ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் இதனால் விரிவான சேதத்தை சந்தித்தது.எனினும், அந் நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் (14.00 GMT, திங்கள்கிழமை) நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சிட்னி நகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சிட்னியில் கடந்த நான்கு நாட்களில் யூத சொத்துக்கள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.மேலும், அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் யூத சமூகத்தை குறிவைத்து இதே போன்ற குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் வந்துள்ளது.இந்த தாக்குதல் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் சிட்னி பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.2023 ஒக்டோபர் 7, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் மற்றும் காசாவில் அடுத்தடுத்து நடந்த போருக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement