கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடந்த 09 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இராஜகிரியவில் இளைஞன் மீது தாக்குதல்: சமூக வலைத்தள காணொளியால் சிக்கிய 7 பேர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடந்த 09 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சம்பவம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.