• Nov 26 2024

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

Tamil nila / Oct 30th 2024, 8:13 pm
image

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மது போதையில் வீடொன்றில்  உள்நுழைந்து நபர் ஒருவரால்   தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது குழந்தை, மனைவியுடன் வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி,பிள்ளை மீது கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் இறுதியாக மோட்டார் சைக்கிள் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு விட்டுச் சென்றது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதால் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படாமல் மதுபோதையில் மீண்டும் அச்சுறுத்துவதால் உடனடியாக அவரை கைது செய்யுமாறு பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மது போதையில் வீடொன்றில்  உள்நுழைந்து நபர் ஒருவரால்   தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனது குழந்தை, மனைவியுடன் வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.வீட்டிற்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.தனது மனைவி,பிள்ளை மீது கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் இறுதியாக மோட்டார் சைக்கிள் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு விட்டுச் சென்றது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதால் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படாமல் மதுபோதையில் மீண்டும் அச்சுறுத்துவதால் உடனடியாக அவரை கைது செய்யுமாறு பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement